குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக , மாவட்டத்தின் நீதிமன்ற செயற்பாடுகள் யாவும் முடக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் இதனால், இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த சகல வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் அவதூறான செய்திகளை இணையத்தளமொன்று செய்திகள் வெளியிட்டதனைக் வருவதனை கண்டித்தே இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த இணையத்தளத்தில் கிளிநொச்சி நீதிபதி தொடர்பாகவும் , கிளிநொச்சி நீதிபதியையும் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை தொடர்பு படுத்தியும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்பாகவும் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான இணையதளங்களை தடை செய்யும் வகையிலான சட்டமூலங்களை அரசாங்கம் இயற்ற வேண்டுமெனவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு.
19.10.2016 – 17:42
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் அவதூறான செய்திகளை இணையத்தளமொன்று செய்திகள் வெளியிட்டு வருவதனை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
குறித்த இணையத்தளத்தில் கிளிநொச்சி நீதிபதி தொடர்பாகவும் , கிளிநொச்சி நீதிபதியையும் , யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை தொடர்பு படுத்தியும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்பாகவும் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தள செய்தி தொடர்பில் , யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர். அதன் முடிவில் நாளை வியாழக்கிழமை யாழ் மாவட்டத்துக்குட்பட்ட சகல நீதிமன்றங்களிலும் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.