165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் தோள் பகுதியில் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பங்களாதேஸ் தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய சுற்றுப் பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டியிலும் அன்டாசன் பங்கேற்க மாட்டார் எனவும் அதன் பின்னர் நடைபெறவுள்ள போட்டிகளில் அன்டர்சன் பங்கேற்பார் எனவும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி ராஜ்கோட்டில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
Spread the love