Home இலங்கைஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து!

ஆகாஷுக்கு : வட மாகாண ஆளுநர் வாழ்த்து!

by admin

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆகாஷை தொலைபேசியூடாக நேற்றைய தினம் திங்கட்கிழமை (25.11.24) தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவேண்டும் எனவும், தொடர்ந்து சாதனைகளைப் படைக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More