நீண்டகாலமாக முடங்கி கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியாக அரச அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே கட்டார் நாட்டில் செப்டம்பர் மாதம் இரண்டு முறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
பேச்சுவார்த்தைகளோ ரகசிய சந்திப்புகளோ நடக்கவில்லை என்றும், தங்கள் இயக்கத்தின் கடினப்போக்கு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் முழுவதையும் திரும்ப பெற வேண்டும் என்ற முன்நிபந்தனையை தலிபான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது