குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் தோட்டமொன்றை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டமை ஜனாதிபதியை ஆத்திரமடையச் செய்துள்ளது.
அரசாங்கம் நெருக்கடியில் இருக்கின்ற தருணத்தில் இவ்வாறு காவல்துறையினர் பொருத்தமற்ற வகையில் தேடுதல் வேட்டை நடத்தியமை அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தால் அதனை விசாரணை செய்வதற்கு பல வழிகள் இருந்த போதிலும், காவல்துறையினர் எடுத்துக்கொண்ட வழி பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.