சிவகாசி அருகே பட்டாசுக் கிட்டங்கி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறத் தொடங்கியதும் குடோனில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். அருகில் இருந்த கட்டிடங்களில் இருந்தவர்களும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்
சிவகாசி அருகே பட்டாசுக் கிட்டங்கில் ஏற்பட்ட தீவிபத்து – 30பேர் காயம்
இந்தியாவின் சிவகாசி அருகே பட்டாசுக் கிட்டங்கி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கு பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயணைப்பு துறையினர் அருகில் சென்று தீயை அணைப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிவகாசி புறவழிச் சாலையில் உள்ள ஒரு பட்டாசு கிட்டங்கியில் வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டிய பட்டாசுகள் பெட்டி பெட்டியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியில் இருந்து பட்டாசுகளை ஓட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டிருந்த போது தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கிட்டங்கி உள்ள அந்த கட்டடமே பற்றி எரிந்து கொண்டிருப்பதாகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பற்றி எரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கிட்டங்கியின் அருகில் மருத்துவ பரிசோதனை ஸ்கான் நிலையம் ஒன்று இருப்பதால், அங்குள்ள ஊழியர்களும், ஸ்கான் எடுக்க வந்த நோயாளிகளும் அங்கு சிக்கியுள்ளதாகவும் இந்த தீ விபத்தால் அந்த இடமே கரும்புகை மண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனத்தில் சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.