குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதியின் மைத்துனருமான உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இன்றைய தினம் இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மிக் 27 ரக தாக்குதல் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடியில் உதயங்கவிற்கும் தொடர்பு உண்டு என நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியிருந்தனர். பிடியாணை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னதாக நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவிர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது எனினும் புதிய தகவல்களின் அடிப்படையில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment