தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் விபத்துகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்மையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின்; 5ஆவது அலகில் மின் உற்பத்திக்கு தண்ணீர் செல்லும் கொதிகலன் அருகில் உள்ள வெப்பக் குழாய் வெடித்துச் சிதறிய விபத்தில், பணியில் இருந்த இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலியாகி உள்ளதுடன்இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதனைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.