201
கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன் நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர் சன் மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக திடீர் மரணத்திற்கு உள்ளாகினார்.
யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சனம், சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இளம் வயதிலேயே பத்தி எழுத்து, அரசியல் கட்டுரைகள், குறும்படத்துறை, கேலிச்சித்திரம் என பன்முக ஆளுமையை இவர் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் மிகவும் நெருக்கடியான காலங்களில் ஊடகப் பணியாற்றிய அஸ்வின் சுதர்சனம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதையும் வென்றவராவார்.
Spread the love