121
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
இந்தியாவிலிருந்து மற்றுமொரு தொகுதி இலங்கை அகதிகள் நாடு திரும்ப உள்ளனர். 25 தமிழ் அகதிகள் இவ்வாறு இந்தியாவிலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் உதவியுடன் தன்னார்வ அடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி நாடு திரும்ப உள்ளனர்.
மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தளை, மற்றும் கிளிநொச்சியை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்ப உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் இவர்களுக்கான விமான டிக்கட்டுகளை இலவசமாக வழங்குவதுடன், ஒரு நபருக்கு தலா 75 டொலர் கொடுப்பனவு ஒன்றையும் வழங்க உள்ளது.
Spread the love