குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
செல்சியா கால்பந்தாட்ட அணியின் முன்னாள் முன்னணி வீரர் டைடிர் டராக்பா (didier drogba) விற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் ஒழுக்க விதிகளை மீறியதாக ட்ராக்பா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான ட்ராக்பா தற்போது Montreal Impact அணியின் சார்பில் விளையாடி வருகின்றார்.
உதிரி வீரராக தம்மால் இருக்க முடியாது அணியின் பயி;ற்றுவிப்பாளரிடம் கூறியுள்ள ட்ராக்பா கடந்த வார இறுதியில் ரொரன்டோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்துள்ளதனைத் தொடர்ந்து அவருக்கு கால்பந்தாட்ட லீக் அபராதம் விதித்துள்ளது. அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை.