குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
கொங்கோ அரச படையினர், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் பொதுமக்களை கொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கொங்கோ அரச படையினர் நடத்திய தாக்குதல்களில் சுமார் 50 பொதுமக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி, கத்தியால் குத்தி, உயிருடன் எரித்து மற்றும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி Joseph Kabila’sவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது அரச படையினர் தலைநகர் Kinshasa இல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2011ம் ஆண்டு தேர்தல் காலத்தை விடவும் இம்முறை அதிகளவான பொதுமக்கள் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளைகுற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மட்டுமே படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் பொதுமக்களை கொலை செய்யவில்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.