169
ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல் இன்று(22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் அகால மரணமடைந்த ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல் இன்று(22) மாலை 4.00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், என பலர் இறுதிவணக்கம் செலுத்தினர்.
Spread the love