149
குளோபல் தமிழ்ச் செய்தியாளா் யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைகழக மாணவர்களில் நடராஜா கஜனின் (வயது 23) இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது.இறுதி நிகழ்வுக்கு செல்லும் பல்கலைகழக மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக 4 பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. அவை ஞாயிறுகாலை 7.00 , 7.30, 8.00 மற்றும் 8.30 மணிக்கு பேருந்துகள் யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து கிளம்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்றைய மாணவனான யாழ்.கந்தரோடையை சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஷனின் (வயது 24) இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.சுன்னாகம் கந்தரோடை பகுதியில் உள்ள மாணவனின் வீட்டில் மாணவனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
Spread the love