குளோபல் தமிழ்;ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை சிறுபான்மை சமூகம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகாரப் பிரதிநிதி ரீடா இசாக் வெளியிட்ட கருத்து வரவேற்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் சிறுபான்மை இனச் சமூகம் தொடர்பில் ரீடா இசாக்கின் மதிப்பீடுகள் துல்லியமானவை என சுட்டிக்காட்டியுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மிகவும் முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, காணிகள் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில்; சிறுபான்மை சமூககங்களின் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது.