பிரான்சின் கலேயில் உள்ள குடியேறிகளின் முகாம் அழிக்கப்பட உள்ளதால் அங்குள்ள மக்கள் திங்கட்கிழமை முதல் வெளியேற ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் விநியோகிக்கள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதி போல காட்சியளிக்கும் கலே முகாமில் பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பும் 10 ஆயிரம் பேர் உள்ளனர். குறித்த முகாமில் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதனால் அது மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேறிகளை வெளியேற்ற, படைகளை பிரயோகிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ள அதிகாரிகள் குடியேறிகள் முகாமைவிட்டு வெளியேற மறுத்தால் தாங்கள் தலையிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.