363
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மேற் கொண்ட போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாணவர்கள் தம்து கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் தீவிர தன்மையை அடைந்துள்ளது.
Oct 24, 2016 @ 07:58
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
தற்போது மாணவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை காலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அப்பகுதியில் சீருடையணிந்த பொலிஸார் எவரும் கடமையில் இல்லை.
அதேநேரம் சிவில் உடையில் பொலிசார் உட்பட பெருமளவான புலனாய்வாளர்கள் போராட்ட சூழலில் காணப்படுகின்றனர்.
Spread the love