குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி இன்று யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜருக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை யாழ். பல்கலைக்கழகத்தின் சகல பீடங்கங்களின் கல்விச் செயற்பாடுகளும் இடம்பெறாது என யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜீவன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர், செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் இதன்போது மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவர் அலெக்ஸ் மற்றும் சட்டபீட மாணவர் சாமர ஆகியோரும் ஆங்கில, சிங்கள மொழிகளில் அறிக்கையினைப் படித்திருந்தனர்.