குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரபல வர்த்தகரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகனுமான அர்ஜூன் அலோசியஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. Perpetual Treasuries நிறுவனம் மற்றும் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தலைமையில்; மேற்கொள்ளப்பட்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அர்ஜூன் அலோசியஸிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2016 மார்ச்சுடன் நிறைவடையும் நிதியாண்டில் குறித்த நிறுவனம் கடந்த நிதி ஆண்டை விடவும் 430 வீத லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.