ஆங் சான் சூகி மௌனம்:-
இரண்டு வாரங்களுக்கு முன்னர், மியான்மாரின் ரக்ஹீன் மாநிலத்தில் ஒன்பது காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னணியில், அங்குள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்மக்கள் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரக்ஹீன் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளை அந்நாட்டு ராணுவம் மூடியுள்ள போதும் அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணமுள்ளன.
மியான்மரின் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூகி குறித்த செய்திகளைத் தெரிவிக்க அந்நாட்டின் அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதால், இந்தப் பிரச்சனை மிகவும் நுண்ணியமாக அணுக வேண்டிய ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.