கிழக்கு மாகாணத்தில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடத்திற்காக நீண்ட காலமாக முன்னெடுத்த போராட்டத்திற்கு வெற்றி கிட்டியுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிழக்கு மாகாணத்தில் உள்ள கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் ரணில் உறுதியளித்துள்ளார் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளர்h.
கிழக்கு மாகாணத்தில் கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு ஆயிரத்து 134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன எனவும் எனவே இந்த ஆசிரியர் வெற்றிடங்களை கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் மற்றும் உயர் தேசிய கல்வியியற் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.