குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிற்போட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் கே.பியை கைது செய்தனை காவல்துறையினர் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகவும் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்த வேளையில் கே.பி தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததனை அடுத்து மனு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
கே.பி வெளிநாடு செல்வதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு
Oct 25, 2016 @ 19:33
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி வெளிநாடு செல்வதற்கான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ம் திகதி வரையில் இந்த தடை மேன்முறையீட்டு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையில் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.