குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
ஐ.எஸ் தீவிரவாதிகள் மொசூல் நகரில் கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் Rupert Colville தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆரம்ப கட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த பாரியளவு கூட்டு மனித படுகொலை குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் 50 முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஒரே இடத்தில் வைத்துப் படுகொலை செய்துள்ளனர் எனவும் இந்த தாக்குதல்கள் தொடர்பிலான அறிக்கையொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.