குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கோப் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட நடவடிக்கை எடுப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுப்பார் எனவும் இந்த மோசடி நடவடிக்கைகளை ஒரு போதும் மூடி மறைக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் எடுத்து வந்த நடவடிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோப் அறிக்கை, ஜனாதிபதி ,மத்திய வங்கி பிணை முறி , மோசடி ,லக்ஸ்மன் யாபா அபேவர்தன