157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வற் வரி குறித்த சட்டம் 66 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வற் வரியை 11 வீதம் முதல் 15 வீதம் வரையில் உயர்த்துவதற்கான சட்டம் இன்று பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்டது.
இதன் போது வற் வரி அதிகரிப்பிற்கு 112 வாக்குகள் ஆதரவாகவும், 46 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன. வற் வரி அதிகரிப்பு குறித்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது 65 உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love