புனர்வாழ்வு அளிக்கப்படாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களே ஹாபா குழுவல் அங்கம் வகிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தப்பிச் சென்ற புனர்வாழ்வு அளிக்கப்படாத சுமார் 270 முன்னாள் போராளிகளில் ஒரு தரப்பினரே இந்த ஹாவா குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று வன்முறைகளில் இந்தக் குழுவினர் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இந்த ஹாவா குழுவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினால் ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவுடன் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.