படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு இன்றைய தினம் வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது முன்னதாக படுகொலை செய்யப்பட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஒன்றினைந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் படுகொலையான குடும்பத்திற்கு 10 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என கோரினார். அதேவேளை மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான இமானுவேல் ஆர்னோல்ட் நஷ்ட ஈடு வழங்கப்படுவது மட்டுமின்றி நீதியான விசாரணைகள் முன்னெடுப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
அவை தாமதிக்கப்படுமாயின் அரசு இயந்திரத்தை முடக்கும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு நாங்கள் செல்லவேண்டி வரும் என தெரிவித்தார்.