அரசியல் எப்போதும் கொள்கையை மீறிச் செல்லக்கூடாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், முசூரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய குடிமையியல் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி முடித்த பின்னர், மத்திய அரசின் முக்கிய துறைகளில் உதவி செயலாளர்களாக குறுகிய கால பணியில் அமர்த்தப்பட்டனர்.
நிர்வாகத்தில் அனுபவ முதிர்ச்சியையும், இளம் தலைமுறையின் புதுமை எண்ணங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, ஒட்டுமொத்த நிர்வாகத்தின் செயல்பாட்டு முறையை இளம் அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டது.
மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் தொடர்புடைய 58 அமைச்சகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட இளம் அதிகாரிகள் பயிற்சிக் காலம் முடிவடைந்தது. பயிற்சி நிறைவு செய்தனர்.
இதன்போது அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா, மின்னணு நீதிமன்றம், சுற்றுலா, ஆட்சி நிர்வாகத்தில் செயற்கைகோள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புதிய வரைவு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு காட்சியமைப்புடன் விளக்கிக்காட்டினர். எந்த தளத்தில் இயங்கினாலும், குழுவாக சேர்ந்து பணியாற்றுங்கள். கூட்டு முயற்சிக்கு சிறந்த பலன் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவெடுக்கும் போது, 2 விஷயங்களை மனதில் கொண்டாக வேண்டும் என்று தெரிவித்த மோடி, உங்கள் மேற்கொள்ளும் முடிவு தேச நலனுக்கு எதிரானதாக அமைந்துவிடக் கூடாது. இரண்டாவது, உங்கள் முடிவு நாட்டில் ஏழைகளுக்கு கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது என்றும் மேலும் தெரிவித்தார்.