குளோபல் தமிழ் செய்தியாளர்
இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரு தரப்பிற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் கடும் தாக்குதலை நடத்தி வருவதாகவும் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ராஜௌரி மாவட்டத்தின் சுந்தர்பனி என்னும் இடத்தில் தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா பதில் தாக்குதலை கொடுக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.