குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது. சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறிகள் தொடர்பிலான கோப் குழு அறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி சமர்ப்பித்திருந்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கோப்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் கௌரரவமளிப்பதாகவும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.