Home இலங்கை முதியோர் இல்லங்கள் குறையவேண்டும் – டெனிஸ்வரன் :

முதியோர் இல்லங்கள் குறையவேண்டும் – டெனிஸ்வரன் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கிளிநொச்சி
மன்னார் பட்டித்தோட்டம் புதிய உதயம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தால் கீரி மற்றும் பட்டித்தோட்டம் பகுதிகளில் உள்ள மூத்த பிரைஜைகளால் நடாத்தப்பட்ட சர்வதேச முதியோர் தின விழா நிகழ்வுகள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டித்தோட்டத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களான வைத்தியர் ஞா.குணசீலன், சட்டத்தரணி அ.பிரிமூஸ் சிறைவா ஆகியோரும், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், கிராம அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமத்தின் மூத்த பிரஜைகள் என பலரும் கலந்துகொண்டனர்.

14717091_10210772397935182_3655515580279349324_n1
குறித்த நிகழ்வில் அமைச்சர் தனது கருத்தை தெரிவிக்கையில், குறித்த நிகழ்வை சிறப்பாக ஆயத்தம் செய்தவர்களை தாம் பாராட்டுவதாகவும், தற்போதைய இளைஞர்கள் காவோலை விழ குருத்தோலை சிரிக்கும் என்ற பழமொழிக்கு ஒப்பாகவே நடந்துகொள்கின்றனர் என்று மிகவும் வருத்தத்தோடு தெரிவித்ததோடு, இதே போல எமது மாகாணம் இன்று இவ்வாறான ஓர் துர்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் இரண்டொரு தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் என்னுடைய மனதை வெகுவாக பாதித்தது என்றும் அவ்வாறு தான் எமது மாகாணத்தில் முதியவர்களை ஒரு துளியேனும் மதிக்காத சமூகமாக மாறுவது மிகுந்த சாபமாக தாம் கருதுவதாகவும் தெரிவித்ததோடு, இளைஞர்கள் முதியவர்களது பெறுமதியை உணர்ந்து அவர்களது அனுபவத்துக்கு மரியாதை கொடுத்து அதனை எமது வாழ்விலும் கடைப்பிடிக்கும்போது அவர்களது அனுபவமானது நம்மை மென்மேலும் மெருகூட்டும்.

14724548_10210772431056010_6791883058313518634_n1
இந்த அனுபவக்கல்வியை நாம் வேறு எவரிடமும் பெற முடியாது என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ளுங்கள் என்றும், முதியவர்கள் எமது பொக்கிஷங்கள் அல்லது விலை மதிப்பற்ற சொத்துக்கள் என்றும் தெரிவித்தார். முதியோர் இல்லங்கள் குறைக்கப்படவேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள் என்று மிகவும் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More