குளோபல் தமிழ் செய்தியாளர்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்க வேண்டுமென பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கராச்சியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த பாகிஸ்தான் தொழில், வர்த்தகசபையின் தலைவர் அப்துல் ரவூப் ஆலம் தற்போது நிலவிவரும் சூழலின்படி, இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை தொடரவேண்டிய எந்த தேவையும் பாகிஸ்தானுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள அனைத்து வர்த்தக சமுதாயமும் இணைந்து இந்தியாவுடன் இனியும் வர்த்தக உறவுகளை தொடர முடியாது என்பது உள்ளிட்ட எவ்வித முடிவுகளையும் எடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.