172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் மேலும் 12 புலனாய்வு உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் லசந்தகொலை தொடர்பில் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
இந்த இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்த இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். லசந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love