ஏமனில் போராளிகள் வசமுள்ள பாதுகாப்பு வளாகம் மீது சவூதிதலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய தொடர் வான்வழித்தாக்குதல்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை மாலை துறைமுக நகரான {ஹடெய்டா அருகே இருந்த வளாகத்தில் மூன்று வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த பாதுகாப்பு வளாகமானது ஹூதி போராளிகள் தங்களது எதிராளிகளை சிறை வைக்கும் வளாகமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அந்த கட்டடம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அதில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறை கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் கொல்லப்படும் பொதுமக்களுக்கு சர்வதேச அளவில் கண்டனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.