குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டார் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிக்கின்றனர் எனவும் எனினும், பிரதமர் இந்த பிரச்சினையின் போது வெளிப்படைத்தன்மையுடனேயே செயற்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க என்ற நபர் ஒளிந்து மறைந்து தாம் செய்யும் செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியவரல்ல எனவும் அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதார முகாமைத்துவ குழுவின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஓர் நிலைமை காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.