குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கோப் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடமையாகும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான சகல தகவல்களும் கோப்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரிந்துரைகளை அமுல்படுத்தும் பொறுப்பு பிரதமரைச் சாரும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றை வலுப்படுத்த வேண்டுமென எல்ல நேரங்களிலும் கூறி வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கோப்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தி தமது வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.