குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலை குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ஏழு பேரைக் கொண்ட விசேட ஜூரிகள் சபையின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்தக் கொலை தொடர்பில் ஆறு பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
இந்த ஆறு பேரில் மூன்று பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று சந்தேக நபர்களும் ஜூரிகள் சபையின் முன்னிலையில் விசாரணை நடத்தப்படவேண்டுமென விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.