172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் தனியார் வகுப்புக்களை நடத்தும் பாடசாலை ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாடசாலை கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ததன் பின்னர், தனியார் கல்வி நிறுவனங்களை கிரமமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love