மத்திய இத்தாலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக பாதிப்புக்கு உள்ளன நகரங்கள் மற்றும் கிராமங்களை புனரமைப்பதற்கு சுமார் ஒன்பது பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என இத்தாலிய அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.
திருத்தவேலைகள் மேற்கொள்ளப்படும் வேளையில் கப்பல் கொள்கலன்கள் தற்காலிகத் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படும் எனவும் இயன்றளவுக்கு குறைந்த காலத்திற்கு மட்டும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர்கள் மற்றும் பிராந்திய தலைவர்களோடு இடம்பெற்ற கலந்தரையாடலின் பின்னர் இத்தாலிய பிரதமர் மேட்டியோ ரென்சி தெரிவித்துள்ளார்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான நோர்சியா பகுதியில் உள்ள தேவாலயங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் உறுதியளித்துள்ள அவர் தேவாலயங்கள் இல்லாமல் இருந்தால், நோர்சியா தனது குணாதிசயத் தன்மையை இழந்துவிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.