மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகள் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் அறிக்கை ஆகியன சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கோப் குழுவின் விசாரணை அறிக்கை, சுனில் கந்துன்நெத்தியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் மத்திய வங்கி பிணை பரிமாற்ற நடவடிக்கைகளால் அரசாங்கத்திற்கு பாரிய நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.