Home இலங்கை விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எவரும் பங்காளிகளாக மாறவில்லை அதே நிலைமைதான் இன்றும் தொடர்கிறது:

விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் எவரும் பங்காளிகளாக மாறவில்லை அதே நிலைமைதான் இன்றும் தொடர்கிறது:

by admin
பவுண் கொடுத்தோம்,தோடு கொடுத்தோம், தாலிகொடுத்தோம் ஆகவே விடுதலையை வாங்கித் தாருங்கள் என்றுதான் நாங்கள் விடுதலைப் புலிகளை பார்த்து கேட்டோமே தவிர  நாங்கள் எவரும் பங்களிப்பவர்களாக மாறவில்லை அதே நிலைமைதான் இன்றும் நீடிப்பதாக நான் கருதுகிறேன். எனவேதான் ஒரு செயற்பாட்டில் நாங்கள் அத்தனைபேரும் பங்கேற்க வேண்டும் என்று சொல்லி கேட்கின்றேன். அமைச்சா் ஜங்கரநேசன் தெரிவித்துள்ளாா்.
01-11-2016 கிளிநொச்சியில் இடம்பெற்ற வடக் மாகாண சபையின்  மரம் நடுகை மாதம் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா் அங்கு அவா் மேலும்  தெரிவிக்கையில்
விடுதலைப்புலிகள் கூட வனவளப் பிரிவு என்று ஒன்றை வைத்து இயற்கையை பாதுகாத்தார்கள் எனவே நாங்களும் அவர்கள் விட்ட இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய தேவை இருக்கிறது.
நாங்கள் இங்கே மரங்களை நாட்டிக்கொண்டிருக்கின்றோம் கிளிநொச்சியில் இரணைமடுவை கடந்து இருக்கின்ற வனங்களில் பெருமளவில் மரங்களை வெட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது எனவே அமைச்சர் என்ன செய்கின்றார், அமைச்சு என்ன செய்கிறது, வடக்கு மாகாண சபை என்ன செய்கிறது என்று கேள்வி கேட்கலாம் எங்களுடைய சக்திக்குப்பட்டது இதுதான் மரங்களை நடலாம், மரங்களை தரலாம்.எங்களுக்கான ஒரு ஆட்சி அதிகாரம்,எங்களுக்கான ஒரு நிறைவேற்று அதிகாரம்  இருந்திருந்தால் நிச்சமாக மரங்களையும்,மணல் கொள்ளையையும், என இயற்கைக்கு மாறான எல்லா செயற்பாடுகளை தடுத்து நிறுத்தியிருப்போம். சொன்னதை செய்வதற்கும் கோடு போட்ட இடத்தில் இரு என்றால் இருப்பதற்கும் இது விடுதலைப் புலிகளின் காலம் அல்ல. ஒரு அரச இயந்திரம் இதனை வழிநடத்த மாகாண சபை என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அதிலும் பெயரளவில் ஒப்புக்குச் சப்பாக எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாம் தரப்பட்டுள்ள மாகாண சபையை வைத்துக்கொண்டு இறுக்கமான நிர்வாகத்தை நடத்தமுடியாமல்தான் இருக்கின்றோம் எனவே எங்களுக்கு இருக்கின்ற அதிகாரம், நிதிபலம் என்பவற்றை கொண்டு நாங்கள் எடுக்கின்ற திட்டங்கள் வெற்றிப்பெற  மக்களது ஒத்துழைப்பு என்றும் தேவை எனத் தெரிவித்த அமைச்சர்
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி நாங்கள் மரம் நடுகையில் ஈடுப்பட்டோம், ஆனால் அன்றைய தினம் இரவு பலரது வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.
அதன் பின்னர்தான் நாம் தீர்மானித்தோம் நாங்கள் எவரது நினைவாகவும் மரங்கள் நடுவதனை எவரும் தடை செய்ய முடியாது இது எங்களுடை உரிமை ஆகவே இதனை ஒரு அங்கீகாரம் பெற்ற நிகழ்வாக, மாதமாக பிரகடணம் செய்ய
வேண்டும் என்ற வகையில் 2014 ஆம் ஆண்டு மாகாண சபையில்  கார்த்தினை திங்களை மரநடுகை மாதமாக பிரகடணம் செய்தோம்.
இதனை நாம் ஒரு பொருத்தமான மாதமாக தெரிவு செய்திருக்கின்றோம் வெறுமனே உணர்வுபூர்வமாகவும் அன்றி வெறுமனே ஆறிவுபூர்வமாகவும் அன்றி இரண்டும் கலந்த கார்த்திணை தீப திருநாள் உள்ள மாதடாகவம் மண்ணுக்காக  மரணித்த மறவர்களை கொண்ட மாதமாக உள்ள கார்த்தினை மாத்தத்தினை தெரிவு செய்திருகின்றோம்.
நாம் மரங்களை நடுவதனை பண்பாடாக கொண்டிருந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டுகளும் நாம் ஏதாவது ஒரு கருப்பொருளை தெரவு செய்து மரம் நடுகையை மேற்கொள்கின்றோம். கடந்த ஆண்டு  ஜந்து இலட்சம் மரக் கன்றுகள் ஜந்து மாவட்டங்களில் என்று தெரிவு  செய்திருகின்றோம். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக சொந்து மண் சொந்த மரங்கள் எனும் தொனிப்பொருளில் உள்ளுர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிர்நாடி எனும் கருத்துக் ஏற்ப எங்களுடைய பிரதேசங்களை சேர்ந்த மரங்களுக்கு கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து நடுகை செய்வது என்று நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
ஏராளமான பொது நிறுவனங்கள் அமைப்புகள் மரநடுகையை ஒரு இயக்கமான முன்னெடுத்து வருவதனை நாம் காண்கின்றோம். எங்களுடைய மரம் நடுகை மாதமும் பொது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நாம் வெற்றியாகவே பார்க்கின்றோம். மேலும் இந்த நிகழ்வை வட மாகாண சபை செய்கின்றது என்பதற்காக இது எங்களுடையது அல்ல, அமைச்சு முன்னெடுக்கிறது என்பதற்காக அமைச்சினுடையது அல்ல,அமைச்சர் முன்னிற்க்கின்றார் என்பதற்காக ஜங்கரநேசனுக்குரியது அல்ல, இது ஊர் கூடி தேர் இழுக்கின்ற நிகழ்ச்சி, வெளியே பார்வையாளர்களாக நின்று கல்லெறிந்து விட்டு போகலாம் ஆனால் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி பார்க்கின்ற போதுதான் இதிலுள்ள சிரமங்கள் அத்தனையும் தெரியும், எனவே நீங்கள் ஒவ்வொருவரும் நடுகின்ற ஒவ்வொரு மரத்தையும் பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More