குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
வடக்கு மாகாண சபையின் விவசாய, நீா்ப்பாசன, கால்நடை, சுற்றுச் சூழல் அமைச்சினால் வருடந்தோறும் நடத்தி வருகின்ற மரநடுகை செயறிட்டம் 2016 இற்கானது கிளிநொச்சியில் இன்று 01-11-2016 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சொந்த மண் சொந்த மரங்கள் எனும் கருப்பொருளில் உள்ளுர் மரங்கள் உயிர்ச் சூழலின் உயிா்நாடி எனும் வகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம் என்ற வாசகத்துடன் இவ் வருடத்திற்கான மர நடுகை மாதம் கார்த்திகை 01 தொடக்கம் 30 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சா் விக்கினேஸ்வரன் முதன்மை அதிதீயாக கலந்துகொண்டு மரம் ஒன்றை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளாா்.
கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஜந்கரநேசன்,கல்வி அமைச்சா் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன், மாகாண எதிா்க் கட்சி தலைவா் தவராசா, மாகாண சபை உறுப்பினா்கள் மற்றும் அமைச்சின் செயலாளா்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபா், மாணவா்கள் என பலா் கலந்துகொண்ட னா்.