சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்தமைக்கு எதிராக சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கு சொந்தமான நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 16ம் திகதி குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோரை விளக்கமளிக்குமாறும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளை இரத்துச் செய்யப்பட்டுள்ள சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமத்தை, கைமாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.