குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை விவகாரத்தில் சீனாவிற்கு எவ்வித மறைமுக நோக்கங்களும் கிடையாது என இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியன்லியங் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனப் பங்களிப்பு குறித்து சில தரப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் இலங்கையில் சீன நிறுவனங்கள் கடமையாற்றி வருவதாகவும், திட்டங்களை பெற்றுக்கொள்ள சீன நிறுவனங்கள் லஞ்சம் வழங்கியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சீனா தொடர்பில் இலங்கை மக்களும் ஊடகங்களும் பிழையான கருதுகோளைக் கொண்டிருப்பதாகவும் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீனா உதவி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையீடு செய்வதில்லை எனவும் அதற்கான அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.