156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கொல்லப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அண்மையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சர்ச்சைக்குரிய முறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதேவேளை, மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி சட்ட மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
Spread the love