குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளினால் சிரிய சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர முடியவில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergei Shoigu தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் ஆதரவளித்து வரும் கிளர்ச்சியாளர்கள் சிவிலியன்களை கொன்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அலப்போவில் சிரிய மற்றும் ரஸ்ய படையினர் வான் தாக்குதல் நடத்துவதனை நிறுத்திக்கொண்டுள்ளதாகவும் மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளினால் சமாதான பேச்சுவார்த்தைகளை கால வரையறையின்றி காலம் தாழ்த்த நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிரியாவில் போரில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்புக்களும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அனைத்துத் தரப்பினரும் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.