குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்க எதிராக விசாரணைகள் அவசியமில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமரிடம் விசாரணை நடத்த வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது கோப்குழு அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பிரதமருக்கு எவ்வித அவசியமும் கிடையாது என கட்சி தெரிவித்துள்ளது. கோப் குழு அறிக்கையை உடனடியாக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்ததன் மூலம் பிரதமர், குற்றவாளிகளை தண்டிக்க விரும்புகின்றமை புலனாகின்றது என கட்சி தெரிவித்துள்ளது.