170
பாகிஸ்தானின் கராச்சியில் லாண்டி புகையிரத நிலையத்துக்கு அருகே இரண்டு விரைவு புகையிரதங்கள் ஒன்றுடனொன்று மோதிய விபத்தில், குறைந்தது 12 பேர் பலியாகி 30 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான சமிக்ஞை தரப்பட்டதால், இந்த இரண்டு விரைவு புகையிரதங்களும் ஒன்றோடொன்று மோதி விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான புகையிரதங்களின் இரண்டு பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளதாகவும் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என மீட்பு பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Spread the love