180
மத்திய இத்தாலியின் பெருகியா நகரில் உள்ள மலைப்பிரேதேச கிராமமான பெய்வே டோரினாவுக்கு மிக அருகில் இன்று காலை மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்ரர் அளவில் 4.8ஆக அமைந்துள்ளதென அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் விபரங்கள் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தொடர்ந்து நான்கு நில நடுக்கங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து பெருகியா நகரிலிருந்து பொதுமக்கள் பலரும் வெளியேறியுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட முதல் நில நடுக்கத்தில் சுமார் 300க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர் என்பது நோக்கத்தக்கது.
Spread the love