Home இலங்கை தெற்காசியாவில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதனிலை

தெற்காசியாவில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதனிலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தெற்காசியாவில் அதிகளவு மது பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை முதனிலை வகிக்கின்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையர்கள் அதிகளவில் மது அருந்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நிலை இந்தியா வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.உலக அளவில் மது பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை 115ம் இடத்தையும், இந்தியா 117ம் இடத்தையும் வகிக்கின்றது.

இலங்கைப் பிரஜைகளின் தலா மது பயன்பாடு 3.03 லீற்றர் என தெரிவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் மது அருந்துவோர் வரிசையில் பெலரஸ் பிரஜைகள் முன்னிலை வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை லிதுவேனியாவும், மூன்றாம் இடத்தை செக் குடியரசுகளும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More